உயிரிழந்த 9 சிறுவர்கள், தடை செய்யப்பட்ட இருமல் ...
Maybe your like
- health
மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. நமக்கு ஒரு நோய் வரும்போது அதற்கான காரணங்களை அறிந்து அதற்கேற்ற மருந்தை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்வதே பாதுகாப்பானது.
Published:01 Mar 2020 2 PMUpdated:01 Mar 2020 2 PM
0CommentsShareசமீபத்தில் ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் கோல்ட்பெஸ்ட்- PC (Coldbest – PC Syrup) என்ற இருமல் மருந்தை எடுத்துக்கொண்ட 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இருமல் மருந்தை இமாசலப் பிரதேச மாநிலத்தில், `டிஜிட்டல் விஷன்' என்ற நிறுவனம் தயாரித்து வந்தது.

4.7 / 5 Rating
3.5M+ Downloads
Audio Magazines
Instant News Summary
Free 500+ Audio Books
Low Data Usage

Install App
சிறுவர்கள் உரியிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த கோல்ட்பெஸ்ட்- PC இருமல் மருந்தில் டைஎத்திலீன் கிளைக்கால் (Diethylene glycol) என்ற விஷத்தன்மை கொண்ட ரசாயனம் அதிகம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், ஹரியானா, உத்தரப்பிரதேசம், திரிபுரா, மேகாலயா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்பெஸ்ட்- PC இருமல் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Also Read

`வீட்டில் பெஸ்ட் கன்ட்ரோல் செய்யும்போது இதையெல்லாம் கவனியுங்க!' - நிபுணர்களின் அலெர்ட் டிப்ஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் இருமல், சளி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பெரும்பாலான மருந்துகள் இதுபோன்ற சிரப் வகைகளில்தான் இருக்கும். மேலும், காய்ச்சலின்போது மாத்திரை எடுத்துக்கொள்ள விரும்பாத குழந்தைகள்கூட இந்த வகை சிரப்களை மறுக்காமல் குடிப்பார்கள்.

பலர் தங்களுக்கு இருமல், சளி போன்ற பிரச்னைகள் இல்லையென்றாலும்கூட தினமும் இருமல் சிரப் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இருமல் சிரப்பை எடுத்துக்கொள்வது சரியா, தவறா, அதனால் வரும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து நெஞ்சக நோய் மருத்துவர் திருப்பதியிடம் பேசினோம்.
``இருமல் என்பது நம்மை நோய்க் கிருமிகளிடமிருந்து தற்காக்கும் ஒன்று. அதாவது ஏதாவது ஒரு வைரஸ் கிருமியோ அல்லது தூசி, துகள்கள் போன்ற பொருள்களோ காற்று வழியாக நுரையீரலுக்குள் செல்லும்போது அதைத் தடுப்பதற்காக நம் உடல் இயற்கையாக ஆற்றும் எதிர்வினைதான் இருமலும், தும்மலும். நாம் இருமும்போது நுரையீரலில் இருக்கும் காற்றை வேகமாக மூச்சுக்குழாயின் வழியே வெளித்தள்ளுகிறோம்.

அப்படிச் செய்யும்போது உள்ளிருக்கும் தூசி, துகள்கள் இருமல் வழியாக வெளியே வந்துவிடுகிறது. உடலில் ஏதாவது நோய்கள் ஏற்பட்டிருக்கும்போதோ அல்லது நுரையீரலில் பிரச்னை இருக்கும்போதோ இருமலின் தீவிரம் அதிகமாகிறது. இதில் சளியுடன் கூடிய இருமல், சளியற்ற இருமல், அதாவது வறட்டு இருமல் (Dry Cough) என்று இரண்டு வகைகள் இருக்கின்றன.
இருமல் ஒரு நோயாளிக்குச் சிரமத்தைத் தரும்போது அவர் இருமல் மருந்தை நாடிச் செல்கிறார். பெரும்பாலானோர் தங்களுக்கு இருமல் ஏற்பட்டவுடன் மெடிக்கல் ஷாப்புக்குச் சென்று தங்களுக்குத் தெரிந்த இருமல் சிரப்புகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளைக்கேட்டு வாங்கிவந்து சாப்பிட்டு, அது பலனளிக்காதபட்சத்தில் மருத்துவரிடம் செல்கின்றனர்.

ஆனால், இப்படி மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. நமக்கு ஒரு நோய் வரும்போது அதற்கான காரணங்களை அறிந்து அதற்கேற்ற மருந்தை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்வதே பாதுகாப்பானது.
Also Read

``செயற்கை முறை கருத்தரித்தல் குழந்தையின் ஆயுளைப் பாதிக்குமா?" - மகப்பேறு மருத்துவரின் விளக்கம்
இருமல் மருந்துகளை இரண்டு வகைகளின் கீழ் பிரிக்கலாம். ஒன்று, காஃப் எக்ஸ்பெக்டோரன்ட்(Cough Expectorant). மற்றொன்று, காஃப் சப்ரெஸ்சன்ட்(Cough Suppressant). காஃப் எக்ஸ்பெக்டோரன்ட் மருந்துகள் நுரையீரலில் இருக்கும் சளியைப் பிரித்து, நோயாளியின் உமிழ்நீர்ச் சுரப்பைத் தூண்டி உள்ளிருக்கும் சளியை இருமலின் வழியாக எளிதாக வெளியேற்ற உதவுகின்றன. காஃப் சப்ரெஸ்சன்ட் மருந்துகள் இருமலை ஏற்படுத்தும் மூளையின் பகுதியோடு தொடர்புகொண்டு இருமல் ஏற்படுவதற்கான தூண்டுதல்களைக் குறைத்து இருமலைக் கட்டுப்படுத்துகின்றன.

சில நுரையீரல் நோய்களில் நுரையீரலில் இருக்கும் கோழை போன்ற சளியின் அளவு அதிகமாக இருக்கும். எனவே, அதை இருமல் மூலம் வெளியில் கொண்டுவந்தே ஆக வேண்டும். எனவே, இங்கு காஃப் எக்ஸ்பெக்டோரன்ட் இருமல் மருந்துகள் பயன்படுகின்றன. ஆனால், சிலருக்குச் சளியற்ற வறட்டு இருமல் மட்டும் இருக்கும்.
இதை Interstitial Lung Disease(ILD) என்பார்கள். நுரையீரலில் உள்ள தசைநார்கள் எல்லாம் இறுகிப்போவதால் இந்த ILD வறட்டு இருமல் ஏற்படுகிறது. எனவே, இந்த வகை இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காஃப் சப்ரெஸ்சன்ட் சிறந்த தீர்வாக இருக்கும். ஆக, நமக்கு இருமல் ஏற்படும்போது அது எந்த வகை என்று அறியாமல் இருமல் மருந்துகளை மாற்றி எடுத்துக்கொண்டோம் என்றால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

ஜம்மு - காஷ்மீரில் இருமல் மருந்து குடித்துச் சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டால் அதில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் குடித்த கோல்ட்பெஸ்ட்- PC என்ற இருமல் மருந்தில் டைஎத்திலீன் கிளைக்கால் என்ற கிளிசராலின் வகையைச் சேர்ந்த ஒரு ரசாயனம் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிளிசரால் இனிப்புச் சுவை கொண்டது. மேலும், இது தொண்டையின் ஈரப்பதத்தை அதிகரித்து சளியை எளிமையாக வெளியேற்ற உதவும் என்ற காரணத்தினாலேயே இருமல் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
Also Read

``எங்கும் ஏளனங்கள்... நம்மைச் சுற்றியுள்ள குவாடன்களுக்குத் தீர்வு என்ன?" - ஒரு வழிகாட்டல்
ஆனால், டைஎத்திலீன் கிளைக்கால் என்பது தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு ரசாயனம். இது சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் செயலிழப்பை ஏற்படுத்தும் என்பதால் இருமல் மருந்துகளில் இதைச் சேர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியில்லாத ரசாயனங்களைப் பயன்படுத்தியதால் கோல்ட்பெஸ்ட்- PC இருமல் மருந்துக்குத் தற்போது தடைவிதித்துள்ளனர்.

சிலர் தங்களுக்கு இருமல் பிரச்னை இல்லையென்றாலும்கூட தினமும் இருமல் சிரப்புகளை எடுத்துக்கொண்டிருப்பார்கள். இதற்குக் காரணம் அதில் உள்ள கொடின் (Codeine) என்ற ஆல்கஹால் வகையைச் சேர்ந்த ரசாயனம்.
இது இருமலால் ஏற்படும் வலியைக் குறைத்து ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவக்கூடியது.

எனவே, இதற்குப் பழகியவர்கள் தொடர்ந்து இருமல் மருந்தை அடிக்ஷன்போல எடுத்துக்கொண்டிருப்பார்கள். இந்தக் காரணத்தால் கொடின் சேர்க்கப்பட்ட இருமல் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி வாங்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading recommendations...இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.- health
- children
- death
- awareness
- cough syrup
- doctor guidance

விகடனின் கிளாசிக் படைப்புகள் இப்போது ஆடியோ புத்தகங்களாக!
Tag » Codistar Dx Cough Syrup Uses In Tamil
-
கோடிஸ்டார் டிக்ஸ் சிரப் / Codistar Dx Syrup In Tamil
-
கோடிஸ்டார்-டிஎக்ஸ் இருமல் சிரப் / Codistar-DX Cough ...
-
கோடிஸ்டார் டிஎக்ஸ் சிரப் (Codistar Dx Syrup) - Lybrate
-
Codistar In Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க ...
-
Codistar-DX Cough Syrup: View Uses, Side Effects, Price And ... - 1MG
-
Codistar Syrup: View Uses, Side Effects, Price And Substitutes | 1mg
-
Codistar DX Cough Syrup 100 Ml - Apollo Pharmacy
-
8 மாநிலங்களில் விற்பனை நிறுத்தம் | Cough Syrup - YouTube
-
Codistar (10/4 Mg) Syrup - Uses, Dosage, Side Effects ... - Practo
-
Cough Syrup Oral: Uses, Side Effects, Interactions ... - WebMD
-
Coldcough Syrup Dosage Guide
-
Use Of Cough And Cold Preparations During Breastfeeding - PubMed
-
This Cough Syrup Banned In India, Experts Say 'Poses Risk To ...